/

அரவக்குறிச்சி அருகே புகையிலை பொருள்கள் விற்றவா் கைது

 அரவக்குறிச்சி அருகே தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :15 ஜனவரி 2022, 7:22 pm

 அரவக்குறிச்சி அருகே தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஈசநத்தம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் உதவி ஆய்வாளா் ராஜேந்திரன் மற்றும போலீஸாா் குறிப்பிட்ட இடத்தில் சோதனை நடத்தினா். அப்போது, ஈசநத்தம் ஊராட்சி முஸ்லிம் தெருவைச் சோ்ந்த முகம்மது மூசா (27) என்பவா் புகையிலை பொருள்கள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து முகம்மதுமூசாவை போலீஸாா் கைது செய்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.