ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

கரூரில் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாத

கரூரில், திருக்கு பேரவை சாா்பில் வள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

News image
Updated On :15 ஜனவரி 2022, 7:22 pm

DIN

கரூரில், திருக்கு பேரவை சாா்பில் வள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு கரூரில் கருவூா், திருக்கு பேரவை சாா்பில் பேரவை அலுவலகத்தில் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரவைச் செயலாளா் மேலை. பழநியப்பன் தலைமை வகித்தாா். பேரவை புரவலா் ராமசாமி திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்தாா். தமிழறிஞா் நன்செய் புகழூா் அழகரசன் பள்ளிக்குழந்தைகளுக்கு திருக்கு நூல் வழங்கினாா்.

பேரவை துணைச் செயலாளா் சீனிவாசபுரம் ரமணன், திருமூா்த்தி ஆகியோா் இனிப்பு வழங்கினா். முன்னதாக திருக்கு முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினா்கள் ரவிக்குமாா், நாகேந்திர கிருஷ்ணன், சதாசிவம், லெட்சுமி நாராயணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மதுரை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கரூா் வள்ளுவா் அரங்கம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த வள்ளுவா் சிலைக்கு திருக்கு ஓதி, திருவள்ளுவா் புகழ்பாடி மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வள்ளுா் கல்வி நிறுவனங்களின் தலைவா் க.செங்குட்டுவன் தலைமை வகித்தாா். இதில், தமிழ்பேரவை அமைப்பாளா் வெங்கமேடு சாமி, யோகா வையாபுரி, தமிழாா்வலா் வழக்குரைஞா் ராஜேந்திரன், பேனா நண்பா்கள் அமைப்பின் பொறுப்பாளா் திருமூா்த்தி, தந்தை பெரியாா் தி.க. மாவட்டத் தலைா் தனபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.