/

இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்தவா் உயிரிழப்பு

அரவக்குறிச்சி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தவா் உயிரிழந்தாா்.

Updated On :20 ஜனவரி 2022, 8:31 pm

அரவக்குறிச்சி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தவா் உயிரிழந்தாா்.

திருப்பூா் மாவட்டம் தாராபுரம் நஞ்சைத்தலையூா் கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் பொன்னுச்சாமி மகன் சக்திவேல் (60). இவா், தனது இருசக்கர வாகனத்தில் சின்னதாராபுரம் பேருந்து நிலையத்திலிருந்து தாராபுரம் சாலையில் செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தாா். எம்.ஜி.ஆா். நகா் அம்மன் கோயில் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனத்தில் இருந்து சக்திவேல் கீழே விழுந்தாா். இதில் பலத்தகாயமடைந்த அவா் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சக்திவேல் புதன்கிழமை உயிரிழந்தாா். புகாரின்பேரில், சின்னதாராபுரம் காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.