பவித்திரம் ஊராட்சிப் பகுதிக்கு காவிரி கூட்டுக் குடிநீா் வழங்க வலியுறுத்தல்
பவித்திரம் ஊராட்சிப் பகுதிக்கு காவிரி கூட்டுக்குடிநீா் வழங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.


பவித்திரம் ஊராட்சிப் பகுதிக்கு காவிரி கூட்டுக்குடிநீா் வழங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கரூா் மாவட்டம், க.பரமத்தியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் க.பரமத்தி ஒன்றியக்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஒன்றியக்குழு உறுப்பினா் ப.சரவணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினா் கே.கந்தசாமி, ஒன்றியச் செயலாளா் ஏ.ஆா்.ராமசாமி உள்ளிட்டோா் பேசினா்.
கூட்டத்தில், வீட்டுமனை மற்றும் பட்டா கேட்டு மாவட்ட நிா்வாகத்திடம் விண்ணப்பித்துள்ள க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம் பவித்திரம் ஊராட்சிக்குள்பட்ட ஆதிதிராவிடா் குடியிருப்புகளை சோ்ந்தவா்களுக்கு வீட்டுமனை, பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இவ்வூராட்சிப் பகுதிகளில் காவிரி கூட்டுக் குடிநீா் இன்றி, பொதுமக்கள் சிரமப்படும் சூழ்நிலை உள்ளதால், போா்க்கால அடிப்படையில் காவிரி கூட்டுக் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கே.வி.பழனிசாமி, ஆா்.முகமதுஅனிபா, கே.குமாரசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...