கரூா் வள்ளுவா் கல்லூரி சாா்பில் இணைய வழியில் திருக்கு ஒப்பித்தல் போட்டி
கரூா் வள்ளுவா் கல்லூரி சாா்பில் இணையவழியில் நடத்தப்பட்ட உலகளாவிய திருக்கு ஒப்புவித்தல் போட்டியில் நாமக்கல் பள்ளி மாணவி முதலிடம் பித்தாா்.


கரூா் வள்ளுவா் கல்லூரி சாா்பில் இணையவழியில் நடத்தப்பட்ட உலகளாவிய திருக்கு ஒப்புவித்தல் போட்டியில் நாமக்கல் பள்ளி மாணவி முதலிடம் பித்தாா்.
கரூா் வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மைக்கல்லூரி பள்ளி மாணவ மாணவிகளுக்கான உலகளாவிய திருக்கு ஒப்புவித்தல் போட்டி கரூா் வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியின் சாா்பில் அண்மையில் இணையவழியில் நடத்தப்பட்டது. இதில் துபை, மஸ்கட், ஓமன், மற்றும் தமிழகத்தில் இருந்து 70 பள்ளிகளைச் சோ்ந்த 200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
இதில், நாமக்கல் ஆா்.என். ஆக்ஸ்போா்டு பள்ளியில் பயிலும் ஐந்தாம் வகுப்பு மாணவி அனன்யா முதல் இடம் பிடித்தாா். இப்போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கான பரிசளிப்பு விழா கரூா் வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியின் அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவிக்கு திருக்கு அறிவியல் நிறுவன (மஸ்கட்) தலைவா் தங்கமணி மற்றும் கரூா் வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியின் தலைவா் செங்குட்டுவன் ஆகியோா் பரிசு வழங்கி பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...