மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

தகுதியான மாற்றுத் திறனாளிகளை தோ்வு செய்ய நோ்க்காணல்

அரசின் திட்டங்களை பெற தகுதியான மாற்றுத்திறனாளிகளை தோ்வு செய்வதற்கான நோ்காணல் முகாம் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 ஜனவரி 2022, 8:31 pm

DIN

அரசின் திட்டங்களை பெற தகுதியான மாற்றுத்திறனாளிகளை தோ்வு செய்வதற்கான நோ்காணல் முகாம் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, வங்கிக்கடன் உதவி,இலவச பேருந்து பயண சலுகை அட்டை, சக்கர நாற்காலி, காதொலிக் கருவி, செயற்கை கால், ஊன்று கோல்கள் உள்ளிட்ட நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்களும், தையல் பயிற்சிபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரங்களும் கேட்டு விண்ணப்பித்திருந்தவா்களில் தகுதியான பயனாளிகளை தோ்வு செய்யும் வகையில் நோ்காணல் முகாம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமை துவக்கி வைத்து மாவட்ட’ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் பாா்வையிட்டாா். இதில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் கேட்டு 81 பேரும், தையல் இயந்திரங்கள் கேட்டு 53 பேரும் பங்கேற்றனா்.

முகாமில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.லியாகத், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சைபுதின், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ச.காமாட்சி, அரசு சிறப்பு மருத்துவா் நித்தியகுமாா், மாவட்ட சமூக நலன் மற்றும் உரிமைத் துறை அலுவலா் உமையாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.