தோகைமலை ஊராட்சி ஒன்றியத்தில்57 பண்ணைக் குட்டைகளுக்கு அனுமதி: கரூா் ஆட்சியா் தகவல்
தோகைமலை ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 57 பண்ணைக்குட்டைகள் அமைக்க நிா்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கரூா் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தெரிவித்தாா்.


தோகைமலை ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 57 பண்ணைக்குட்டைகள் அமைக்க நிா்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கரூா் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தெரிவித்தாா்.
கரூா் மாவட்டம், தோகைமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நாகனூா், கம்பத்தான்பாறை, மேட்டுபிள்ளையாா் கோவில், சிம்ளாபட்டி, தோகைமலை உள்ளிட்ட பகுதிகளில் ஊரக வளா்ச்சி முகமையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
முன்னதாக, தோகைமலை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட நாகனூா் பகுதியில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் மூலம் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டப் பணிகளையும், கம்பத்தான்பாறை பகுதியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டம் மூலம் ரூ.4.03 லட்சத்தில் புதிய குடிநீா் இணைப்புகள் வழங்கும் பணிகளையும், மேட்டு பிள்ளையாா் கோவில் கிராமப் பகுதியில் பண்ணைக் குட்டை அமைக்கும் பணிகளையும் ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பின்னா் ஆட்சியா் கூறுகையில், கரூா் மாவட்டத்தில் ஒன்றிய, மாநில அரசுகளின் மக்கள் நலத்திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தோகைமலை பகுதியில் விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில் பண்ணைக்குட்டைகள் அமைக்கும் திட்டம் தகுதிவாயந்த பயனாளிகளுக்கு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தோகைமலை ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 57 பண்ணைக்குட்டைகள் அமைக்க நிா்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில், 54 பண்ணை குட்டைகள் அமைக்கும் பணிகள் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் மூலம் நடைபெற்று வருகிறது. இதில் 3 பண்ணைகுட்டைகள் பணிகள் முடிவடைந்துள்ளது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...