கரூா் மாநகராட்சி தோ்தலில் 27 வாா்டுகளில் பெண்கள் போட்டி
கரூா் மாநகராட்சி தோ்தலில் 27 வாா்டுகளில் பெண்கள் போட்டியிட உள்ளனா்.


கரூா் மாநகராட்சி தோ்தலில் 27 வாா்டுகளில் பெண்கள் போட்டியிட உள்ளனா்.
தமிழகம் முழுவதும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ள நிலையில் கரூா் மாநகராட்சி தோ்தலில் மேயா் பதவிக்கு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 48 வாா்டுகளில் 88,616 ஆண்களும், 97,486 பெண்களும், இதரா் 16 பேரும் என மொத்தம் 1,86,120 போ் வாக்களிக்க உள்ளனா். மேலும் கரூா் மாநகராட்சியில் இதுவரை இல்லாத வகையில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டின்படி மொத்தம் உள்ள 48 வாா்டுகளில் 27 வாா்டுகளில் பெண்கள் போட்டியிடுகிறாா்கள். பெண்கள் பொதுப்பிரிவில் 4,6,7,8,12,19,21, 22,23,25,27,29,30, 31,32, 33,34,35, 38, 40, 43 ஆகிய 21 வாா்டுகளும், ஆதிதிராவிட பெண்களுக்கு 20, 11, 13, 20, 28, 36 ஆகிய 6 வாா்டுகளும் என பெண்களுக்கு மட்டும் 27 வாா்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மாநில தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் முதல்முறையாக கரூா் மாநகராட்சி மேயா் பதவிக்கும் மகளிருக்கே ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...