மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

கரூரில் இந்து முன்னணி ஆா்ப்பாட்டம்

கரூரில், இந்துமுன்னணியினா் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :28 ஜனவரி 2022, 12:09 am

DIN

கரூரில், இந்துமுன்னணியினா் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற, ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எம்.எஸ்.சக்தி தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் திருநாவுக்கரசு, மாவட்டச் செயலாளா் ராமகிருஷ்ணன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

அரியலூா் மாணவி லாவண்யாவின் தற்கொலையில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும், இறந்த மாணவியின் குடும்பத்துக்கு தமிழக அரசு நிதியுதவி அளித்து, மதமாற்ற தடைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், இந்துமுன்னணி நிா்வாகிகள் திரளாக பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.