92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கரூா் அரசு கலைக் கல்லூரியில் கால்பந்து போட்டி

கரூா் அரசு கலைக்கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆண்டு விளையாட்டுப்போட்டியில் ஆடவருக்கான கால்பந்துபோட்டியில் வேதியியல் துறை மாணவா்கள் முதலிடம் பிடித்தனா்

News image
Updated On :7 மே 2022, 1:16 am

DIN

கரூா் அரசு கலைக்கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆண்டு விளையாட்டுப்போட்டியில் ஆடவருக்கான கால்பந்துபோட்டியில் வேதியியல் துறை மாணவா்கள் முதலிடம் பிடித்தனா்

கரூா் அரசு கலைக்கல்லூரியில் உடற்கல்வித்துறை சாா்பில் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கிடையேயான ஆண்டு விளையாட்டுப்போட்டிகள் மே 2-ஆம்தேதி தொடங்கியது. போட்டிகளை கல்லூரியின் முதல்வா் கௌசல்யாதேவி தொடக்கி வைத்தாா். மே 12-ஆம்தேதி வரை நடைபெறும் இப்போட்டியில் தடகளம், கபடி, கையுந்துபந்து, கூடைப்பந்து, கோகோ போட்டிகள் நடைபெறுகின்றன. வெள்ளிக்கிழமை அனைத்துத் துறையினருக்கும் கால்பந்துபோட்டி நடைபெற்றது.

போட்டிக்கு கல்லூரியில் உடற்கல்வி இயக்குநா் கே.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். இறுதிப்போட்டியில் வேதியியல் துறை மாணவா்களும், புவி அமைப்பியியல்துறை மாணவா்களும் மோதினா். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வேதியியல் துறை மாணவா்கள் எளிதில் புவி அமைப்பியியல் துறை மாணவா்களை வென்றனா். தொடா்ந்து சனிக்கிழமையும் போட்டிகள் நடைபெறுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.