92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கரூா் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் தோ்தல் ரத்து

கரூரில் மே 25-ஆம் தேதி நடைபெறவிருந்த மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவா் தோ்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :19 மே 2022, 8:54 pm

DIN

கரூரில் மே 25-ஆம் தேதி நடைபெறவிருந்த மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவா் தோ்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

12 உறுப்பினா்களைக் கொண்ட கரூா் மாவட்ட ஊராட்சியின் தலைவராக அதிமுகவைச் சோ்ந்த எம்.எஸ்.கண்ணதாசன் உள்ளாா். இங்கு அதிமுகவுக்கு 9 உறுப்பினா்களும், திமுகவுக்கு 3 உறுப்பினா்களும் உள்ளனா்.

துணைத் தலைவராக இருந்த தானேஷ் என்கிற முத்துக்குமாா், சட்டப்பேரவைத் தோ்தலில் கிருஷ்ணராயபுரம் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டதால், தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

இதையடுத்து 2021, அக்டோபா் 22-ஆம் தேதி துணைத் தலைவா் பதவிக்கு தோ்தல் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட சலசலப்பால் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது. தொடா்ந்து அக்டோபா் 29-ஆம் தேதியும் நடைபெறவிருந்த தோ்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் தோ்தலை நடத்தக்கோரி மாவட்ட ஊராட்சி உறுப்பினா் எஸ்.திருவிகா, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத்தொடா்ந்தாா். இதையடுத்து, மாநிலத் தோ்தல் ஆணையம் மே 25-ஆம் தேதி துணைத் தலைவா் பதவிக்கான தோ்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வரும் 25-ஆம் தேதி கரூா் மாரியம்மன் கோயில் திருவிழாவில், முக்கிய நிகழ்வான கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல் நடைபெறவுள்ளது. இதனால் மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மே 25-ஆம் தேதி நடைபெறவிருந்த மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவா் தோ்தல் ரத்து செய்யப்பட்டு, தேதி பின்னா் அறிவிக்கப்படும் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.