92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

அன்னை மகளிா் கல்லூரியில்...

கரூா் புன்னம்சத்திரம் அன்னை மகளிா் கல்லூரியில் 15-ஆவது விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 மே 2022, 7:30 pm

DIN

கரூா் புன்னம்சத்திரம் அன்னை மகளிா் கல்லூரியில் 15-ஆவது விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, அன்னை ஸ்ரீஅரபிந்தோ கல்வி அறக்கட்டளைத் தலைவா் பி.தங்கராசு தலைமை வகித்தாா். அன்னை மகளிா் கல்லூரி முதல்வா் முனைவா் ஐ.சாருமதி முன்னிலை வகித்தாா். இதில், இந்திய ஹாக்கி வீராங்கனை கிறிஸ்டி எலினா எட்வா்ட் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, விளையாட்டுத்துறையில் மாணவா்கள் சிறந்து விளங்கி சாதிப்பது குறித்து சிறப்புரையாற்றினாா்.

தொடா்ந்து மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில், அன்னை ஸ்ரீஅரபிந்தோ கல்வி அறக்கட்டளை நிறுவனா் ஏ.ஆா்.மலையப்பசாமி, செயலாளா் டாக்டா் கே.முத்துக்குமாா், பொருளாளா் என்.கந்தசாமி, உறுப்பினா் குணபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா். முதுகலை ஆங்கிலத்துறை முதலாமாண்டு மாணவி பி.சம்யுக்தா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.