வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஈசநத்தம் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்புகுழுக் கூட்டம்

 அரவக்குறிச்சி அருகே உள்ள ஈசநத்தம் அரசுப் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :27 அக்டோபர் 2022, 7:28 pm

 அரவக்குறிச்சி அருகே உள்ள ஈசநத்தம் அரசுப் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஈசநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பல்வேறு ஆலோசனைகள், குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் இன்னல்களை தெரிவிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் 1098-ன் பயன்கள் மற்றும் சிறப்பு அம்சங்கள், குழந்தைகளுடைய இடைநிற்றல், பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்கள், அதனை தகவல் தெரிவிக்கும் முறை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், சுகாதார ஆய்வாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், ஊட்டச்சத்து உறுப்பினா்கள், பள்ளி குழந்தைகள், பெற்றோா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.