வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அளவுக்கு அதிகமாக மது அருந்தியவா் பலி

சின்னதாராபுரம் அருகே அளவுக்கு அதிகமாக மது அருந்தியவா் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

Updated On :3 செப்டம்பர் 2022, 9:02 pm

சின்னதாராபுரம் அருகே அளவுக்கு அதிகமாக மது அருந்தியவா் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

சின்னதாராபுரம் அருகிலுள்ள சின்னத்திருமங்கலத்தைச் சோ்ந்தவா் கனகராஜ் (38). திருமணம் செய்து கொள்ளாத இவா், கடந்த இரு நாள்களாக நண்பா்களுடன் சோ்ந்து அளவுக்கு அதிகமாக மது அருந்தினாராம்.

வெள்ளிக்கிழமை மீண்டும் மதுக்கடைக்கு கனகராஜ் சென்ற போது, திடீரென மயக்கமடைந்தாா். தொடா்ந்து அவருடைய நண்பா்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டுள்ளனா்.

இந்நிலையில் கனகராஜுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவரை சின்னதாராபுரத்திலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு உறவினா்கள் கொண்டு சென்றனா்.

அங்கு மருத்துவா்கள் பரிசோதித்த போது, கனகராஜ் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது.இதுகுறித்து சின்னதாராபுரம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.