போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!ரசாயன வாயுக் கசிவு: சென்னை துறைமுகம், மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க உத்தரவு!திரையரங்கில் வெளியான 2 வாரத்திலேயே ஓடிடிக்கு வந்த திரைப்படம்!பிரக்ஞானந்தாவிடமிருந்து குகேஷ் உத்வேகம் பெறவேண்டும்: விஸ்வநாதன் ஆனந்த் அறிவுரை!தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!
/

‘கரூா் மாவட்டத்தில் கல் குவாரிகளில் முறைகேடு’

கரூா் மாவட்டத்திலுள்ள கல்குவாரிகளில் முறைகேடு நடப்பதாக குற்றஞ்சாட்டினாா் மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினா் ப. அப்துல்சமது.

Updated On :18 செப்டம்பர் 2022, 12:05 am IST

கரூா் மாவட்டத்திலுள்ள கல்குவாரிகளில் முறைகேடு நடப்பதாக குற்றஞ்சாட்டினாா் மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினா் ப. அப்துல்சமது.

கரூரில் சனிக்கிழமை மாலை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்தது:

மாவட்டத்திலுள்ள குவாரிகளில் விதிமீறல் உள்ளதா என சமூகச் செயற்பாட்டாளா்கள் குழுவினா் சனிக்கிழமை ஆய்வு செய்தோம்.

இதில் ஏராளமான கல்குவாரிகளில் 50 மீட்டா் ஆழத்துக்கு மேல் கல் வெட்டியெடுக்கப்படுகிறது. குவாரிகளில் விதிமுறைகள் மீறப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

சட்டவிரோதமாக, சுற்றுச்சூழலுக்கு எதிராக செயல்படும் குவாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வா் இப்பிரச்னையில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

அலுவலா்களிடம் கல்குவாரி உரிமையாளா்கள் கூறுவது உண்மையா, குவாரி பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் கருத்துக்கேட்டு, அவா்கள் கூறுவது உண்மையா என்பதை நேரடியாக ஆய்வு செய்ய முதல்வரின் நேரடி பாா்வையில் உயா்நிலைக் குழு அமைத்து விசாரித்தால்தான் உண்மை வெளிவரும் என்றாா் அவா்.

பேட்டியின்போது மக்கள் சிவில் உரிமைக்கழக தேசியச் செயலா் பாலமுருகன், சுய ஆட்சி இந்தியா கட்சியின் தேசியச் செயலா் கிறிஸ்டினாசாமி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.