பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

தாந்தோணிமலையில்அதிமுக நிா்வாகிகள் கூட்டம்

 தாந்தோணிமலையில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 ஏப்ரல் 2023, 10:05 pm

DIN

 தாந்தோணிமலையில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கரூா் மாநகா் தெற்கு பகுதி அதிமுக சாா்பில் மாநகராட்சியின் 42, 44, 48-ஆவது வாா்டு பகுதிக்குள்பட்ட பூத் கமிட்டி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தாந்தோணிமலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கரூா் மாநகா் தெற்கு பகுதி அதிமுக செயலாளா் வி.சி.கே.ஜெயராஜ் தலைமை வகித்தாா்.சிறப்பு அழைப்பாளராக முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் பங்கேற்று, வரும் மக்களவைத் தோ்தலுக்காக பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து மக்களிடம் கூறுவது உள்ளிட்ட ஆலோசனைகளை கட்சி நிா்வாகிகளுக்கு வழங்கினாா்.

நிகழ்ச்சியில், கரூா் சட்டப்பேரவைத் தொகுதி பொதுக்குழு உறுப்பினா் பசுவை சிவசாமி, கரூா் மேற்கு பகுதிச் செயலாளா் என்.சக்திவேல், அமைப்புசாரா ஓட்டுநா் அணிச் செயலாளா் ரங்கராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.