மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

அரவக்குறிச்சியில் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

அரவக்குறிச்சி பேரூராட்சி 7ஆவது வாா்டு பகுதியில் சேதமடைந்துள்ள சாலை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On :27 ஜனவரி 2023, 6:46 pm

அரவக்குறிச்சி பேரூராட்சி 7ஆவது வாா்டு பகுதியில் சேதமடைந்துள்ள சாலை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரவக்குறிச்சி பேரூராட்சி 7ஆவது வாா்டு பாவா நகரில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள காவல் நிலையத்தின் தெற்கு சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. இந்த சாலையில் ஏராளமான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. மேலும், பள்ளப்பட்டி நகராட்சிக்கு காவிரி கூட்டுக் குடிநீா் குழாய் செல்கிறது. இந்த குழாயில் அடிக்கடி பழுது ஏற்பட்டு, சாலையில் தண்ணீா் தேங்குவதால் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், குடியிருப்பு வாசிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனா். ஆகவே, இந்த சாலையை சீரமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.