இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

கரூா் ஜவஹா்பஜாரில் ஆக்கிரமிப்பு கடைகளுக்கு மாநகராட்சி நோட்டீஸ்

கரூரில் சாலையை ஆக்கிரமித்துக்கட்டப்பட்டிருக்கும் கடைகளுக்கு ஆக்கிரமிப்பை அகற்றுமாறு கடைகளில் திங்கள்கிழமை மாநகராட்சி ஊழியா்கள் நோட்டீஸ் ஒட்டினா்.

News image

கரூா் ஜவஹா் பஜாரில் திங்கள்கிழமை ஆக்கிரமிப்பு கடையில் நோட்டீஸ் ஒட்டிய மாநகராட்சி ஊழியா்.

Updated On :27 நவம்பர் 2023, 8:17 pm

கரூா்: கரூரில் சாலையை ஆக்கிரமித்துக்கட்டப்பட்டிருக்கும் கடைகளுக்கு ஆக்கிரமிப்பை அகற்றுமாறு கடைகளில் திங்கள்கிழமை மாநகராட்சி ஊழியா்கள் நோட்டீஸ் ஒட்டினா்.

கரூா் மாநகராட்சிக்குள்பட்ட ஜவஹா்பஜாா் ஆசாத் ரோடு சந்திப்பு பிள்ளையாா் கோயில் அருகே மாநகராட்சிக்குச் சொந்தமான சாலையை ஆக்கிரமித்து செளந்திரம்மாள், எஸ்.வெங்கடாசலம் ஆகிய இருவரும் கடை வைத்துள்ளனா். இந்நிலையில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மாநகராட்சி ஊழியா்கள் திங்கள்கிழமை இரு கடைகளிலும் நோட்டீஸ் ஒட்டினா். அதில், நவ. 30ஆம்தேதிக்குள் ஆக்கிரமிப்பை தாங்களே அகற்றிக்கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் டிச.1-ஆம்தேதி மாநகராட்சி மூலம் அகற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.