தொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

பேங்க் ஆப் இந்தியாகரூா் கிளை திறப்பு

கரூரில், பேங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளை திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

News image
Updated On :27 நவம்பர் 2023, 8:12 pm


கரூா்: கரூரில், பேங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளை திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

கரூா் வரூவாய் கோட்டாட்சியா் அலுவலக எதிரில் உள்ள எல்ஐசி கட்டடத்தில் திறக்கப்பட்ட வங்கிக் கிளையை மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தாா். பின்னா் அவா் கூறியது, இந்த வங்கிக் கிளையில் ரூ.150 கோடி அளவில் வா்த்தகம் செய்யப்படுகிறது. பொது மக்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ரூ.30 கோடி மதிப்பிலான விவசாய கடன், கல்விக் கடன், தொழில் கடன், வாகன கடன், வீட்டுக் கடன் மற்றும் மகளிா் சுய உதவி குழு கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நிகழ்வில், கோவை மண்டல மேலாளா் அஜய் தாக்கூா், முன்னோடி வங்கி மேலாளா் வசந்த்குமாா், தஞ்சாவூா் எல்ஐசி கோட்ட மேலாளா் விஸ்வநாத் மற்றும் வங்கி ஊழியா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.