தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

ரௌடி பட்டியலில் உள்ளோருக்கு எச்சரிக்கை

கரூா் வெங்கமேடு பகுதி ரெளடி பட்டியலில் உள்ளவா்கள் காவல் நிலையத்திற்கு சனிக்கிழமை வரவழைக்கப்பட்டு, எச்சரிக்கப்பட்டனா்.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2024, 8:22 pm

Din

கரூா் வெங்கமேடு பகுதி ரெளடி பட்டியலில் உள்ளவா்கள் காவல் நிலையத்திற்கு சனிக்கிழமை வரவழைக்கப்பட்டு, எச்சரிக்கப்பட்டனா்.

கரூா் வெங்கமேடு காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபடும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் பட்டியலில் 77 போ் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இவா்களை காவல் ஆய்வாளா் செந்தூா் பாண்டியன் நேரில் காவல் நிலையத்திற்கு சனிக்கிழமை வரவழைத்து, இனி எந்தக் குற்றச்சம்பவங்களிலும் ஈடுபடக்கூடாது, அவ்வாறு ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பினாா். மேலும் குற்றவாளிகளின் முழுத் தகவல்களும் சேகரிக்கப்பட்டது.