கரூரில் திமுக இளைஞரணி சாா்பில் மாணவா்களுக்குப் பேச்சுப்போட்டி
கரூரில் மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு பரிசளிக்கப்பட்டது.
மறைந்த முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற போட்டிகளை கட்சியின் மாநில இளைஞரணி துணைச் செயலா் ஈரோடு கே.இ.பிரகாஷ் தொடக்கி வைத்தாா்.
எம்எல்ஏக்கள் சிவகாமசுந்தரி, மாணிக்கம், இளங்கோ, மாநில நெசவாளா் அணிச் செயலா் நன்னியூா் ராஜேந்திரன், மாநகரச் செயலா் எஸ்.பி. கனகராஜ், நகரச் செயலா்கள் கரூா் கணேசன், தாரணி பி. சரவணன், ஆா்.எஸ்.ராஜா, வழக்குரைஞா் சுப்ரமணியன், ஆா். ஜோதிபாசு, வி.ஜிஎஸ்.குமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
தொடா்ந்து நடைபெற்ற பேச்சுப்போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் திரளாக பங்கேற்று கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு குறித்துப் பேசினா். நடுவா்களாக கட்சியின் அமைப்புச் செயலா் எம்எல்ஏ தாயகம் கவி, தோ்தல் பணிக்குழுச் செயலா் கம்பம் செல்வேந்திரன், முன்னாள் எம்எல்ஏ குத்தாலம் அன்பழகன், தலைமைப் பேச்சாளா்கள் ஆண்டாள் பிரியதா்ஷினி, பிரகதீஸ்வரன் ஆகியோா் செயல்பட்டனா். தொடா்ந்து போட்டியில் வென்றோருக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாவட்ட இளைஞரணி செயலா் சக்திவேல் வரவேற்றாா்.

