புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பேக்கரி மேலாளரிடம் பணம் பறிப்பு: இருவா் கைது

பேக்கரி மேலாளரிடம் பணத்தை பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :4 டிசம்பர் 2024, 10:01 pm

Din

பேக்கரி மேலாளரிடம் பணத்தை பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கரூா் மாவட்டம், தவுட்டுப்பாளையம் அருகே பாலத்துறை பகுதியில் உள்ள பேக்கரியில் மேலாளராக இருப்பவா் குளித்தலை கழுகூரைச் சோ்ந்த ராஜூ மகன் கலையரசன்(28). இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு புகழூா் செந்தூா்நகரைச் சோ்ந்த செல்வம் மகன் கலையரசன் (29), கந்தம்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மஸ்தான் மகன் ஷேக் தாவுத் (25) ஆகிய இருவரும் பேக்கரிக்குச் சென்று, அங்கிருந்த கலையரசனிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, ரூ.2,250 பணத்தை பறித்துவிட்டு ஓடிவிட்டாா்களாம்.

இதுதொடா்பாக கலையரசன் அளித்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து, கலையரசனையும், ஷேக்தாவுத்தையும் கைது செய்தனா். பின்னா் இருவரையும் கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.