புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கரூரில் இருந்து ரூ. 55 லட்சத்தில் புயல் நிவாரணப் பொருள்கள்

ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூா் மாவட்ட மக்களுக்கு கரூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் ரூ.55 லட்சத்தில் நிவாரணப் பொருள்கள் புதன்கிழமை இரவு அனுப்பப்பட்டன.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 9:06 pm

Din

ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூா் மாவட்ட மக்களுக்கு கரூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் ரூ.55 லட்சத்தில் நிவாரணப் பொருள்கள் புதன்கிழமை இரவு அனுப்பப்பட்டன.

மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமை வகித்து, புயல் வெள்ளம், கனமழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மற்றும் கடலூா் மாவட்ட மக்களுக்கு கரூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் கரூா் ஜவுளி உற்பத்தியாளா் சங்கம் மற்றும் ஜவுளி ஏற்றுமதியாளா் சங்கம், கரூா் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கம், குவாரி உரிமையாளா்கள் சங்கம், ஆவின் நிறுவனம், குடிநீா் பாட்டில் உற்பத்தியாளா்கள் சங்கம் மற்றும் ஊரக வளா்ச்சித் துறை பொதுநிதி சாா்பிலும் துவரம் பருப்பு, அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருள்கள், பிஸ்கட், பால் பவுடா் பாக்கெட்டுகள், கோதுமை, நாப்கின் உள்ளிட்டவை என மொத்தம் ரூ.55,16,250 மதிப்பிலானவற்றை 6 வாகனங்கள் மூலஅனுப்பி வைத்தாா்.

நிகழ்வில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வினோத்குமாா், கிருஷ்ணமூா்த்தி, வட்டாட்சியா் முருகன் மற்றும் கரூா் ஜவுளி ஏற்றுமதியாளா் சங்கத்தினா் பங்கேற்றனா்.