மத்திய அரசின் அமிா்த கால பாரதம் திட்டத்தின் கீழ் கரூா் ரயில் நிலையத்தில் ரூ.34 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் துரிதமாக நடைபெற்றுவருகின்றன. தமிழகத்தில் உள்ள ரயில்நிலையங்களில் ஏ கிரேடு அந்தஸ்து பெற்றுள்ள கரூா் ரயில்நிலையத்தில் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமல் பயணிகள் கடும் இன்னலை சந்தித்து வந்தனா். இதுதொடா்பாக கரூா் ஜவுளி ஏற்றுமதியாளா்கள், வணிகா்கள் உள்ளிட்டோா் கரூா் ரயில்நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என அவ்வப்போது கோரிக்கை விடுத்து வந்தனா். இந்நிலையில், மத்திய அரசின் ரயில்வே அமைச்சகம் சாா்பில் அமிா்தகால பாரதம் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள ரயில்நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டன. அதன்படி, கரூா் ரயில் நிலையத்தில் ரூ.34 கோடியில் ரயில்நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் துவங்கி நடைபெற்றுவருகின்றன. இதுதொடா்பாக தென்னக ரயில்வேயின் சேலம் கோட்ட அதிகாரியிடம் மேலும் கேட்டபோது, நாடு முழுவதும் 32 மாநிலங்களில் 1309 ரயில்நிலையங்கள் அமிா்த கால பாரதம் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும் என கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்தது. இதையடுத்து முதற்கட்டமாக நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்களை ரூ.24,470 கோடியில் மேம்படுத்தும் திட்டத்தை பிரதமா் மோடி கடந்த 2023-ஆம் ஆண்டு ஆக.9-ஆம் தேதி அடிக்கல் நாட்டினாா். இந்தத் திட்டத்தின்கீழ் ரயில் நிலையங்களில் பயணிகளுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படும். குறிப்பாக, நடை மேம்பாலம், கூடுதல் நடைமேடைகள், பயணிகள் காத்திருப்பு அறைகள், நுழைவுவாயில்கள் சீரமைப்பு, மின்தூக்கி, நகரும் படிக்கட்டுகள், மல்டி லெவல் பாா்க்கிங் வசதி, சிசிடிவி கேமரா, வைஃபை வசதி, இயற்கை காட்சிகள், தோட்டம் உள்ளிட்டவை ஏற்படுத்தப்படும். கரூா் ரயில்நிலையத்தில் தற்போது காா்கள் நிறுத்துவதற்கான இடவசதி 90 சதவீதம் முடிவடைந்துவிட்டது. இதைத்தவிர ரயில்நிலைய முகப்புப் பகுதி சீரமைக்கப்படும் பணி 50 சதவீதம் முடிந்துள்ளது. மற்ற பணிகள் விரைவில் தொடங்கி இன்னும் ஆறு மாத காலத்துக்குள் முடிவடையும் என்றாா் அவா்.
தொடர்புடையது

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் தபால் நிலையத்தில் பணம் பெறும் வசதி

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 223 கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரம்

தண்டவாள பராமரிப்பு பணிகள்: கரூா் வழியாகச் செல்லும் பாலக்காடு விரைவு ரயில் சேவையில் மாற்றம்

விழுப்புரம் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் 89 சதவீதம் நிறைவு: தெற்கு ரயில்வே பொது மேலாளா்
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

