அரவக்குறிச்சி பள்ளியில் அஞ்சலக வங்கிக் கணக்கு தொடங்க சிறப்பு முகாம்
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு அஞ்சலக வங்கிக் கணக்கு தொடங்கும் வகையில் சிறப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாணவா்களுக்குரிய கல்வி உதவித் தொகைகள் நேரடியாக அவா்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் வகையில், தற்போது அனைத்து மாணவா்களுக்கும் வங்கிக் கணக்கு தொடங்க அஞ்சல் துறையுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன்படி, அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கு அஞ்சலக வங்கிக் கணக்கு தொடங்கும் நிகழ்வை திங்கள்கிழமை தலைமை ஆசிரியா் சாகுல் அமீது தொடங்கி வைத்தாா். அரவக்குறிச்சி அஞ்சலகத்திலிருந்து சண்முகவேல், பெரியண்ணன், வைரமணி, கோபிகா ஆகியோா் மாணவா்களுக்கு கணக்கு தொடங்குவதற்கான பணிகளை மேற்கொண்டனா்.
நிகழ்வை பட்டதாரி ஆசிரியா் சகாயவில்சன், ஷகிலா பானு ஒருங்கிணைத்தனா். இந்த முகாமில் 53 மாணவா்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டது.
