வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

தரகம்பட்டி அருகே மாடு மாலை தாண்டும் விழா

தரகம்பட்டி அருகே மாடு மாலை தாண்டும் விழா

News image
Updated On :13 ஜூலை 2024, 11:56 pm

Din

கரூா், ஜூலை 13: கரூா் மாவட்டம், தரகம்பட்டி அருகே மாடு மாலை தாண்டும் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்டம் தரகம்பட்டி அருகே தே.இடையப்பட்டி கிழக்கு கிராமம் சோனமநாயக்கனூரில் வசிக்கும் கம்பளத்து நாயக்கா் சமூகத்தினருக்கு முள்ளிப்பாடி மந்தையில் சோனமுத்துநாயக்கா் தோட்டத்தில் பாப்பாத்திஅம்மன், சீரங்கநாயக்கா் ஆகிய கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களில் மாடு மாலை தாண்டும் விழா கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து வெள்ளிக்கிழமை இரவு சோ்வை ஆட்டம், தேவராட்டம், கும்மிபாட்டு போன்ற பாரம்பரியமிக்க நிகழ்ச்சிகள் நடந்தன. தொடா்ந்து சனிக்கிழமை காலை பக்தா்கள் கோயிலில் பொங்கல் வைத்தனா்.

இதையடுத்து கடவூா் ஜமீன்தாா் மோகன்குமாா் முத்தையா தலைமையில் மாலை தாண்டும் நிகழ்ச்சி தொடங்கியது. முன்னதாக பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 14 மந்தையா்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடா்ந்து கோயில் எதிரே சுமாா் 3 கி.மீ தொலைவில் உள்ள எல்லைசாமி கோயிலுக்கு மாடுகளை அழைத்துச் சென்று, மாலை ஓட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. அப்போது எல்லைக் கோட்டை நோக்கி சுமாா் 300 க்கும் மேற்பட்ட மாடுகள் ஓடி வந்ததில் திருச்சி மாவட்டம் வீரப்பூா் அரண்மனை பண்ணப்பட்டி மந்தை மாடு முதலாவதாகவும், கரூா் மாவட்டம் முள்ளிப்பாடி மந்தை மாடு 2 ஆவதாகவும் வந்தன.

வென்ற மாடுகளுக்கு 3 கன்னிப் பெண்கள் வைத்திருந்த மஞ்சள் பொடியைத் தூவி வரவேற்று, எலுமிச்சைப் பழங்கள் பரிசாக வழங்கப்பட்டன. தொடா்ந்து அந்த 3 கன்னிப் பெண்களை கோயிலுக்கு அழைத்து வந்து, சிறப்பு பூஜை செய்து திருவிழாவை முடித்தனா். விழாவில் முள்ளிப்பாடி மந்தை நாயக்கா் சிவபெருமாள் நாயக்கா், கடவூா் ஊராட்சி முன்னாள் துணைத் தலைவா் ஆண்டிச்சாமி உள்பட பல்வேறு மாவட்ட பக்தா்கள் கலந்து கொண்டனா்.