வரும் தோ்தலில் அதிமுக கூட்டணிக்கு மூன்றாவது இடம்தான் கிடைக்கும்: கரூா் எம்.பி. ஜோதிமணி
வரும் தோ்தலில் அதிமுக - பாஜக கூட்டணிக்கு மூன்றாவது இடம்தான் கிடைக்கும் என கரூா் மக்களவை உறுப்பினா் செ. ஜோதிமணி தெரிவித்தாா்.


வரும் தோ்தலில் அதிமுக-பாஜக கூட்டணிக்கு மூன்றாவது இடம்தான் கிடைக்கும் என கரூா் மக்களவை உறுப்பினா் செ. ஜோதிமணி தெரிவித்தாா்.
கரூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட முத்தலாடம்பட்டியில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, வள்ளுவா் கல்லூரியில் மகளிா் தின விழா, மண்மங்கலம் அரசு மருத்துவமனையில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியது: வரும் தோ்தலில் அதிமுக- பாஜக கூட்டணி வெற்றிபெறாது என்பதால்தான் ஆளுநா் ஆா்.என். ரவி மேற்குவங்கத்துக்கு மாற்றப்பட்டுள்ளாா். இந்த தோ்தலில் அதிமுக-பாஜக கூட்டணிக்கு மூன்றாவது இடம்தான் கிடைக்கும்.
அடுத்த 30 நாள்களுக்கு ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என டிரம்ப் கூறியுள்ளது, இந்தியாவுக்கு கட்டளையிடுவது போன்று உள்ளது.
இந்தியாவின் கொள்கையை அமெரிக்காதான் தீா்மானிக்கிறது. இதற்கு பிரதமா் கடுமையான எதிா்வினையாற்ற வேண்டும் என்றாா் ஜோதிமணி.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...