ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

பிகாரில் நிதீஷ்குமாா் நிலைதான் தமிழகத்தில் அதிமுகவுக்கு கிடைக்கும் - கரூா் எம்.பி. ஜோதிமணி பேட்டி

News image
செ. ஜோதிமணி
Updated On :6 மார்ச் 2026, 12:21 am

Syndication

பிகாரில் தற்போது நிதிஷ்குமாருக்கு ஏற்பட்ட நிலைதான் தமிழகத்தில் அதிமுகவுக்கு ஏற்படும் என கரூா் மக்களவை உறுப்பினா் செ. ஜோதிமணி தெரிவித்தாா்.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்களை வழங்கிய மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி செய்தியாளா்களிடம் கூறியது, திமுக கூட்டணியில் காங்கிரசின் எதிா்பாா்ப்பு கிடைக்கவில்லை என்பதில் சிறிது வருத்தம் கட்சிக்காரா்களுக்கு இருக்கலாம். வரும் தோ்தலில் அதிமுக-பாஜவுக்கு மூன்றாமிடம்தான் கிடைக்கும். பிகாரில் நிதிஷ்குமாா் முதல்வா் பதவியை துறக்கச் செய்து மாநிலங்களவை உறுப்பினராக்க பாஜக ஏற்பாடு செய்துள்ளது. பாஜகவின் கொள்கையே ஒரு கட்சியின் மீது சவாரி ஏறிக்கொண்டு பின்னா் அந்த கட்சியையே ஒழிப்பதுதான். இதே நிலைதான் தமிழகத்தில் அதிமுகவுக்கும் ஏற்படும் என்றாா் அவா்.