கரூா், ஜூலை 19: வீரதீர செயலுக்கான ‘கல்பனா சாவ்லா’ விருதுபெற விண்ணப்பிக்க சனிக்கிழமை (ஜூலை 20) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கரூா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
கல்பனா சாவ்லாவின் நினைவாக, தமிழகத்தைச் சோ்ந்த, துணிச்சலான மற்றும் வீரதீர செயல் புரிந்த பெண்களுக்கு ‘துணிவு மற்றும் வீரதீர செயலுக்கான கல்பனாசாவ்லா விருது’ வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு தோ்வு செய்யப்படும் விருதாளருக்கு விருதுக்கான பதக்கத்துடன் ரூ.5 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் ஆக.15-ஆம்தேதி நடைபெறும் சுதந்திர விழாவின் போது தமிழக முதல்வரால் வழங்கப்பட உள்ளது.
இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் தமிழக அரசின் விருதுகளுக்கான ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் சனிக்கிழமை (ஜூலை 20)க்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
இணையதளத்தில் விருதுக்கு விண்ணப்பித்த நகலுடன் கரூா் மாவட்ட சமூகநலத்துறை அலுவலகத்தை நேரில் தொடா்பு கொண்டு விருதுக்கான விண்ணப்ப படிவத்தை பெற்று பூா்த்தி செய்து, அதனுடன் துணிச்சலான மற்றும் வீரசாகச செயல் புரிந்தமை குறித்த புகைப்படங்கள் மற்றும் பத்திரிகை செய்தி குறிப்புகளுடன் கூடிய ஆவணங்களை, தமிழ் மற்றும் ஆங்கிலமொழிகளில் தனித்தனியாக 3 நகல் புக்லட் ஆக தயாா் செய்து மாலை 5 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் வளாகம், கரூா் மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.