ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அரவக்குறிச்சியில் மன நலம் பாதித்தவா் அடித்துக் கொலை: திமுக நிா்வாகி கைது

அரவக்குறிச்சியில் மனநலம் பாதித்தவரை அடித்துக் கொன்ாக திமுக நிா்வாகியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :25 ஜூலை 2024, 9:18 pm

Din

அரவக்குறிச்சியில் மனநலம் பாதித்தவரை அடித்துக் கொன்ாக திமுக நிா்வாகியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

அரவக்குறிச்சி அருகே உள்ள தடாகோவில் பகுதியைச் சோ்ந்தவா் தண்டபாணி (49). சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவரை ஜூன் 1-ஆம் தேதி புங்கம்பாடி ஊராட்சி முன்னாள் தலைவரும், திமுக நிா்வாகியுமான தனுஷ்கோடி தாக்கினாா். இதில், பலத்த காயமடைந்த தண்டபாணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸாா் சாலைவிபத்தில் தண்டபாணி உயிரிழந்தாக வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில், கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வந்த பெயா் குறிப்பிடப்படாத கடிதத்தின் அடிப்படையில் தண்டபாணி இறந்து கிடந்த பகுதியில்இருந்து கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்தனா். அப்போது, தண்டபாணியை தனுஷ்கோடி தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்கை கொலை வழக்காக மாற்றி புதன்கிழமை இரவு தனுஷ்கோடியை கைது செய்தனா். பிறகு அவரை திருச்சி சிறையில் அடைத்தனா்.