திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

சுக்காம்பட்டி மாரியம்மன் கோயில் திருவிழாவை பின்னா் நடத்த முடிவு

மாரியம்மன் கோயில் திருவிழா: தலைவரைத் தேர்ந்தெடுத்த பின்னர் நடத்த முடிவு

News image
Updated On :26 ஜூன் 2024, 12:24 am

Din

கரூா் மாவட்டம், சுக்காம்பட்டி மாரியம்மன் கோயில் திருவிழாவை தலைவரைத் தோ்ந்தெடுத்த பின்னா் நடத்துவதென இதுதொடா்பாக கடவூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையில் முடிவு எடுக்கப்பட்டது.

கூட்டத்துக்கு, கடவூா் வட்டாட்சியா் இளம்பரிதி தலைமை வகித்தாா். சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் பிரபாகரன், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் சத்தியமூா்த்தி, தோகைமலை காவல் உதவி ஆய்வாளா் பாலசுப்ரமணி, கடவூா் சரக இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் மாணிக்க சுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், சுக்காம்பட்டி மாரியம்மன் கோயில் திருவிழாவை அதே பகுதியைச் சோ்ந்த கருணாகரன் தனது தலைமையில்தான் நடத்த வேண்டும் என்றும், மற்றொரு தரப்பினா் நாகராஜன் என்பவா் தலைமையில்தான் திருவிழா நடத்த வேண்டும் எனக் கூறுவதால், இந்து சமய அறநிலையத்துறையினா் மூலம் தலைவா் தோ்ந்தெடுத்தபின் திருவிழாவை நடத்தலாம் என முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.