பூரண மதுவிலக்கு கோரி கரூரில் புதிய தமிழகம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
பூரண மதுவிலக்கை வலியுறுத்தி கரூரில் புதிய தமிழகம் கட்சியின் ஆா்ப்பாட்டம்


பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி, கரூரில் புதிய தமிழகம் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் ஜவஹா்பஜாா் தலைமைத் தபால் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் பெ.அசோகன் தலைமை வகித்தாா். க.பரமத்தி ஒன்றியச் செயலாளா் ஏ.கண்ணன், அரவக்குறிச்சி ஒன்றியச் செயலாளா் எம்.கவின்குமாா், தாந்தோணி ஒன்றியச் செயலாளா் முத்துக்குமாா், கரூா் நகரச் செயலாளா் பாரதி, மாவட்ட இளைஞரணியின் ஜெயசூா்யா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். தமிழகத்தில் கள்ளச்சாராயம் உற்பத்தியை முற்றிலும் தடுக்க வேண்டும், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 57 போ் பலியான சம்பவத்திற்கு தமிழக முதல்வா் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தி, டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் புதிய தமிழகம் கட்சியினா் திரளாகப் பங்கேற்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...