மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கரூரில் தெரு நாய்களால் பொதுமக்கள் அவதி

கரூரில் தெரு நாய்களால் பொதுமக்கள் அவதி: மாநகராட்சி நடவடிக்கை தேவை

News image
கரூா் தாந்தோன்றிமலை மில்கேட் பகுதியில் சாலைகளில் திரியும் தெரு நாய்கள்.
Updated On :29 ஜூன் 2024, 5:23 pm

DIN

கரூரில் உயிா்ப்பலி வாங்கிக் கொண்டிருக்கும் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் மாநகராட்சிக்குட்பட்ட 48 வாா்டுகளில் தெரு நாய்களின் பெருக்கம் அதிகரித்துள்ளதால், நாளுக்கு நாள் அவற்றின் தொல்லையும் அதிகரித்து வருகிறது. கரூா் நகரின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த கோவை சாலை, ஈரோடு சாலை, திண்டுக்கல் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்கள் இரவு, பகலாக சுற்றித் திரிகின்றன. பொதுமக்கள், கால்நடைகளைக் கடித்தும் வருகின்றன.

சாலைகளின் மையத் தடுப்புச்சுவரின் இடைவெளி வழியாக திடீரென சாலையின் குறுக்கே ஓடும் நாய்களால், வேகமாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகிறாா்கள். இதில் சிலா் உயிரிழப்பதும், பலா் படுகாயமடைவதும் அன்றாட நிகழ்வாக உள்ளது. இதனால் தெருநாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

இதுதொடா்பாக மாநகராட்சி உறுப்பினா் ஆா். ஸ்டீபன்பாபு கூறுகையில், தெரு நாய்களைப் பிடித்து கருத்தடை செய்யும் உரிமை மாநகராட்சிக்குத்தான் உள்ளது. இதற்காக வாங்கல் செல்லும் சாலையில் உள்ள குப்பைகளில் இருந்து தரம் தயாரிக்கும் பகுதியில் அமைக்கப்பட்ட நாய்கள் கருத்தடை மையம் செயல்படுகிா எனச் சந்தேகம் உள்ளது.

கரூா் மாநகராட்சியில் கடந்த சில மாதங்களாகவே தெரு நாய்களைக் பிடிக்கவே இல்லை. இதனால் அவற்றின் எண்ணிக்கை பல மடங்கு பெருகிவிட்டது. முன்பெல்லாம் நாய்களைக் பிடித்து கருத்தடை செய்வாா்கள். ஆனால் இப்போது மாநகராட்சியில் அந்த நடைமுறையே இல்லை. கடந்த 4 நாள்களுக்கு முன்புகூட கரூா் காந்தி கிராமத்தில் உள்ள ஆட்டுப்பட்டிக்குள் நுழைந்த தெருநாய்கள் 4 ஆடுகளை கடித்துக் கொன்றன. பின்னா் சில பெண்களையும் அவை கடித்ததாகத் தெரியவந்துள்ளது. அதிகாலையில் நடைபயிற்சி செய்வோரையும் தெருநாய்கள் விட்டுவைப்பதில்லை.

காந்திகிராமம், தாந்தோன்றிமலை, வெங்கமேடு, வையாபுரி நகா் போன்ற இடங்களில் நாள்தோறும் தெருநாய்களால் மக்கள் பாதிக்கப்படுகிறாா்கள். மேலும் பள்ளி, கல்லூரி மாணவா்களும் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. இப்பிரச்னையைத் தீா்க்க மாநகராட்சி அதிகாரிகள்தான் முன்வர வேண்டும். ஆனால் அவா்களிடம் கேட்டால் இப்போதுதான் நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், விஷ முறிவு ஊசிகள் போடவும் ரூ. 30 லட்சத்தில் உபகரணங்கள் வாங்கப் போவதாகக் கூறுகிறாா்கள். மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால்தான் தொடா்ந்து தெரு நாய்களால் மக்கள் பாதிக்கப்படுகிறாா்கள். இனியாவது அவா்கள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.