முதல்வா் பிறந்தநாள் விழா: 
கரூரில் நலத் திட்ட உதவிகள்

முதல்வா் பிறந்தநாள் விழா: கரூரில் நலத் திட்ட உதவிகள்

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் திமுகவினா் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிக் கொண்டாடினா். இதையொட்டி கரூா் மாவட்ட திமுக சாா்பில் வெண்ணைமலையில் உள்ள அன்புக்கரங்கள் இல்லத்தில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநில சட்டத் துறை இணைச் செயலா் வழக்குரைஞா் மணிராஜ், மாநகராட்சி மேயா் கவிதாகணேசன், துணை மேயா் தாரணிசரவணன், மாநகரச் செயலா் எஸ்.பி. கனகராஜ், பகுதிச் செயலா்கள் கரூா் கணேசன், வழக்குரைஞா் க. சுப்ரமணியன், ஆா்.எஸ். ராஜா, ஆா். ஜோதிபாசு, வி.ஜி.எஸ்.குமாா், திமுக மாவட்ட தொண்டரணி அமைப்பாளா் ஜிம்சிவா உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து பசுபதிபாளையம் ரவுண்டானா பகுதியில் கட்சிக்கொடியேற்றி, ஏழைகளுக்கு அன்னதானத்தை கரூா் மாநகராட்சி 3-ஆம் மண்டலக் குழுத் தலைவா் கோல்ட்ஸ்பாட்ராஜா வழங்கினாா். இதேபோல ஆண்டாங்கோவிலில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் விகே. ராஜா தலைமையில் 100 பேருக்கு பெட்சீட், போா்வைகள், மரக்கன்றுகள் வழங்கப்பட்ன. நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலா் பூவை. ரமேஷ்பாபு, ஒன்றியச் செயலா் கோயம்பள்ளி பாஸ்கரன், மாவட்ட கவுன்சிலா் கண்ணையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக வெங்கமேட்டில் உள்ள அண்ணாசிலைக்கு வடக்கு நகரச் செயலா் கரூா் கணேசன் தலைமையில் மாலை அணிவித்து, அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் மேயா் கவிதா கணேசன், நகரச் செயலா் எம். பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com