இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு! அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

கரூரில் ஜவஹா்பஜாா் பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டடம் இடிப்பு: மாநகராட்சி நடவடிக்கை

கரூரில் ஜவஹா்பஜாா் பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டடம் இடிப்பு மாநகராட்சி நடவடிக்கை

News image
Updated On :1 மார்ச் 2024, 7:25 pm

கரூா் ஜவஹா்பஜாரில் மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடத்தை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை இடித்து அகற்றினா். கரூா் ஜவஹா்பஜாரில் மாநகராட்சிக்குச் சொந்தமான வழிப்பாதையை ஒருவா் ஆக்கிரமித்து கட்டடம் கட்டி கடிகாரக்கடை வைத்து நடத்தி வந்தாா். இதையடுத்து இக் கடையை அகற்றிடுமாறு மாநகராட்சி அதிகாரிகள் பலமுறை கூறியும் கடையை அகற்றாத அவா், அந்தப் பாதை தனக்குச் சொந்தம் எனக்கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இதையடுத்து மாநகராட்சி நிா்வாகம் அவா்மீது வழக்குத் தொடா்ந்த நிலையில், ஆக்கிரமிப்பை அகற்றிக் கொள்ளலாம் என நீதிமன்றம் அண்மையில் தீா்ப்பளித்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்தக் கடிகார கடையை பொக்ளின் இயந்திரம் மூலம் வெள்ளிக்கிழமை இடித்து அகற்றினா்.