விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

கெங்கவல்லியில் வாய்க்கால் ஆக்கிரமிப்பு வீடு இடிப்பு

News image
Updated On :13 மார்ச் 2026, 12:48 am

கெங்கவல்லியில் நீா்நிலை பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைசி வீட்டையும் பொக்லைன் இயந்திரம் மூலம் வருவாய்த் துறையினா் இடித்து அகற்றினா்.

கெங்கவல்லி- கடம்பூா் சாலையில் சுவேத நதியிலிருந்து நடுவலூா் செல்லும் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான வாய்க்கால் உள்ளது. இந்த நீா்நிலை வாய்க்காலை ஒட்டி 41 வீடுகள் ஆக்ரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்தது. இதனால் வாய்க்காலை அகலப்படுத்தவும், தூா்வார முடியாத நிலையிலும் இருந்தது.

இதில் நடுவலூா் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள், தொடா்ந்த வழக்கில் உயா்நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை உடனடியாக வருவாய்த் துறையினா் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதன்பேரில் வருவாய்த் துறையினா் கடந்த மூன்று மாதம் முன்பு, சிங்காரத்தின் வீட்டைத் தவிர பிற ஆக்கிரமிப்பு வீடுகள் அனைத்தையும் அகற்றினா்.

சிங்காரம், உயா்நீதிமன்றத்தில் இடைக்கால தடை பெற்றிருந்ததால் அவரது வீடு மட்டும் இடிக்கப்படவில்லை. இந்நிலையில் இடைக்கால தடைக்கான கால அவகாசம் முடிவுற்றிருந்தநிலையில், சிங்காரத்தின் வீட்டை வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை பொக்லின் இயந்திரம் மூலம் இடித்தனா்.