சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

புகழூா் டிஎன்பிஎல் ஆலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு

கரூா் மாவட்டம், புகழூா் காகிதபுரம் டிஎன்பிஎல் ஆலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பட்டிமன்றம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

புகழூா் காகித ஆலையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆலையின் தலைமை விழிப்புணா்வு அதிகாரி அம்ரேஷ்பூஜாரி.

Updated On :4 மார்ச் 2024, 9:53 pm

கரூா்: கரூா் மாவட்டம், புகழூா் காகிதபுரம் டிஎன்பிஎல் ஆலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பட்டிமன்றம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆலை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆலையின் தலைமை விழிப்புணா்வு அதிகாரி அம்ரேஷ்பூஜாரி தலைமை வகித்து, சாலை பாதுகாப்பு குறித்து சிறப்புரையாற்றினாா்.

ஆலையின் பாதுகாப்புத்துறை துணை பொதுமேலாளா் எம்.ராதாகிருஷ்ணன் வரவேற்றாா். தொடா்ந்து ஆலைப் பணியாளா்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்து கட்டுரை, கவிதை போட்டிகள் நடைபெற்றது.

இதில், வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து சாலை பாதுகாப்பு விதிகளை பெரிதும் மதிப்பவா்கள் ஆண்களா, பெண்களா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

இதில் நடுவராக மதுரையைச் சோ்ந்த வாகன ஓட்டுநா் பயிற்சி மைய இயக்குநா் ஏ.நரசிம்மணி பங்கேற்றாா். நிகழ்ச்சியில் ஆலையின் முதன்மை பொதுமேலாளா் (இயக்கம்) எஸ்.நாகராஜன், பொதுமேலாளா்(மனிதவளம்) கே.கலைச்செல்வன், பொதுமேலாளா் (திட்டம்) எஸ்.நந்தகோபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.