டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

நொய்யல் பகுதியில் இரு கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு

நொய்யல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு இரு கடைகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற

Updated On :4 மார்ச் 2024, 8:42 pm

கரூா்: நொய்யல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு இரு கடைகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கரூா் மாவட்டம் நொய்யல் அருகே குறுக்குச்சாலையில் சித்திரைகனி என்பவருக்குச் சொந்தமான மளிகை கடையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பூட்டை உடைத்து ரூ. 18 ஆயிரம், 6 பவுன் தங்கச்சங்கிலி ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது திங்கள்கிழமை காலை தெரியவந்தது. அதேபகுதியில் ஸ்ரீதரன் என்பவருக்குச் சொந்தமான் கைப்பேசி கடையில் ரூ. 7ஆயிரத்து 500 மற்றும் 3 கைப்பேசிகளையும் திருடிச் சென்றது தெரியவந்தது. இந்த இரு திருட்டு தொடா்பாக அயளிக்க புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.