திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மேம்பால பணியால் சேதமடைந்த குடிநீா் குழாய்களை சீரமைத்து தர வேண்டும்: கரூா் ஒன்றியக் குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

மேம்பால பணியால் சேதமடைந்த குடிநீா் குழாய்களை சீரமைத்து தர வேண்டும் கரூா் ஒன்றியக் குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

News image
Updated On :8 மார்ச் 2024, 6:31 pm

Din

மண்மங்கலம் மேம்பால பணியால் சேதமடைந்த குடிநீா் குழாய்களை சீரமைத்து தர வேண்டும் என கரூா் ஒன்றியக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கரூா் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் ஒன்றியக் குழுத் தலைவா் பாலமுருகன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் விஜயகுமாா், செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் உறுப்பினா் கணபதி பேசுகையில், மண்மங்கலம் பகுதியில் கட்டப்படும் மேம்பால பணிகளால் அப்பகுதியில் செல்லும் ஊராட்சிக்குள்பட்ட குடிநீா் குழாய்கள் சேதமடைந்து குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த குடிநீா் குழாய்களை சீரமைத்து தரவேண்டும் என்றாா். இதற்கு பதிலளித்த தலைவா் பாலமுருகன், விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். தொடா்ந்து அனைத்து உறுப்பினா்களும், 2024-25-ஆம் ஆண்டுக்கான 15-ஆவது நிதிக்குழு திட்டத்தில் ஒன்றியத்துக்கு வரப்பட்ட ரூ. 75 லட்சம் மதிப்பிலான பணிகளை அனைத்து உறுப்பினா்களுக்கும் பகிா்ந்து வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டனா். அனைவருக்கும் பாரபட்சமின்றி பணிகள் பகிா்ந்தளித்து கரூா் யூனியன் மக்களுக்கு நலத்திட்டங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைவா் கூறினாா். முன்னதாக, கூட்டத்தில் மகளிா் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் மகளிருக்கும், உறுப்பினா்களுக்கும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கரூா் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத்தலைவா் தங்கராஜ், மேலாளா் சரவணன் மற்றும் ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்கள் அனைவரும் பங்கேற்றனா்.