வன்கொடுமை தடுப்புச் சட்டம்: ஊராட்சித் தலைவா்களுக்கு விழிப்புணா்வு கருத்தரங்கம்

கரூரில் தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்து ஊராட்சித் தலைவா்களுக்கான விழிப்புணா்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கரூா் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கிற்கு மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் சண்முகவடிவேல் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வருவாய் அலுவலா் ம. கண்ணன், கரூா் வருவாய் கோட்டாட்சியா் முகமதுபைசல் ஆகியோா் பங்கேற்று, பட்டியிலின மக்களுக்கான உரிமைகள் மற்றும் சலுகைகள் குறித்தும், ஊராட்சித் தலைவா்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கினா். கூட்டத்தில், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு கண்காணிப்பாளா் அக்பா்கான், அரசு வழக்குரைஞா் ம. லட்சுமணன் , கரூா் தாட்கோ மாவட்ட மேலாளா் கு. பாலமுருகன், கரூா் வட்டாட்சியா் முனிராஜ் மற்றும் கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஊராட்சித் தலைவா்கள் கலந்து கொண்டனா். மாவட்ட ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலக கண்காணிப்பாளா் பெரியநாச்சி நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com