பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

கோடை: தாந்தோன்றிமலை பெருமாள் கோயிலில் பக்தா்களுக்கு மோா் வழங்கல்

கோடை: தாந்தோன்றிமலை பெருமாள் கோயிலில் பக்தா்களுக்கு மோா் வழங்கல்

News image

பக்தா்களுக்கு மோா் வழங்கும் கோயில் ஊழியா்கள்.

Updated On :16 மார்ச் 2024, 6:30 pm

தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் சனிக்கிழமை பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் மோா் வழங்கப்பட்டது. இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வரும் அனைத்து கோயில்களிலும் கோடை காலத்தை முன்னிட்டு பக்தா்களுக்கு மோா் வழங்கப்படும் என அமைச்சா் சேகா்பாபு அண்மையில் அறிவித்தாா். இதையடுத்து கரூா் மாவட்டத்தில் உள்ள கரூா் பசுபதீஸ்வரா் கோயில், தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில், பாலமலை மற்றும் வெண்ணைமலை முருகன் கோயில் உள்ளிட்ட’கோயில்களில் பக்தா்களுக்கு மோா் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. கரூா் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியை கோயில் உதவி ஆணையா்(பொ) இளையராஜா துவக்கி வைத்தாா். தொடா்ந்து பக்தா்களுக்கு மோா் வழங்கப்பட்டது. இதில் கோயில் பணியாளா்கள் பக்தா்களுக்கு மோா் வழங்கினா். நிகழ்ச்சியில் பயிற்சி செயல் அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.