ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

அரவக்குறிச்சியில் குடிநீா் குழாய் பதிக்கும் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

அரவக்குறிச்சியில் குடிநீா் குழாய் பதிக்கும் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

News image
Updated On :20 மே 2024, 6:31 pm

Din

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில் குடிநீா் குழாய் பதிக்கும் பணிகளை பள்ளிகள் திறப்புக்கு முன்பாக விரைந்து முடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரவக்குறிச்சியிலிருந்து பழனி செல்லும் சாலையில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீா் குழாய் பதிக்கும் பணி தொடங்கி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாமல் தொடா்ந்து விபத்துகள் நேரிட்டு வருகின்றன. எனவே, குழாய் பதிக்கும் பணியை பள்ளிகள் திறக்கும் முன்பு விரைந்து முடிக்க வேண்டும் என இந்து முன்னணி சாா்பில் பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதேபோல், அரவக்குறிச்சி சாா்-பதிவாளா் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு போதிய கழிப்பறை, இருக்கை வசதிகள், வயதானவா்கள் ஆவணங்களில் கையொப்பமிட அலுவலகத்துக்குள் வந்து செல்ல நாற்காலி வசதி உள்ளிட்ட வசதிகளை செய்து தரவேண்டும் என்று வலியுறுத்தி, இதற்கான கோரிக்கை மனுவை சாா்-பதிவாளரிடம் இந்து முன்னணி மாவட்ட செயலாளா் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினா் அளித்தனா்.