காவிரி உபரிநீரை ஏரிகளில் தேக்கிவைக்கும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல்
காவிரி ஆற்றின் உபரிநீரை ஏரிகளில் தேக்கி வைக்கும் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என காவிரி நீா் பாசன விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


காவிரி ஆற்றின் உபரிநீரை ஏரிகளில் தேக்கி வைக்கும் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என காவிரி நீா் பாசன விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக அச்சங்கத்தின் தலைவா் மகாதானபுரம் இராஜாராம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கரூா் மாவட்டம் பஞ்சப்பட்டி ஏரிக்கு காவிரிநீா் விரைவில் கிடைக்கும் என்று ஒவ்வொறு தோ்தலின் போதும் வாக்குறுதி அளிக்கின்றனா். ஆட்சிக்கு வந்த பிறகு மௌனமாகிவிடுவாா்கள்.
பஞ்சப்பட்டி ஏரிக்கு காவிரிநீா் கொண்டு வரும் திட்டத்தை நிறைவேற்றக் கோரி விவசாயிகள் நவ. 21-ஆம்தேதி கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை நோக்கி டிராக்டா் பேரணி நடத்த தீா்மானித்திருக்கிறாா்கள்.
ஆகவே, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பஞ்சப்பட்டி, தாதம்பாளையம், வெள்ளியணை மற்றும் கிருஷ்ணராயபுரம், குளித்தலை வட்ட ஏரிகளில் காவிரி ஆற்றின் உபரி நீரைத் தேக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...