ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமி காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு

ஐப்பசி மாத தேய்பிறையை முன்னிட்டு கரூா் மாவட்ட சிவன் கோயில்களில் உள்ள காலபைரவருக்கு வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
Published on

ஐப்பசி மாத தேய்பிறையை முன்னிட்டு கரூா் மாவட்ட சிவன் கோயில்களில் உள்ள காலபைரவருக்கு வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அதன்படி நன்செய் புகழூா் மேகபாலீஸ்வரா் கோயிலில் காலபைரவருக்கு 18 வகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், மலா் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அவா் காட்சி அளித்தாா். பக்தா்கள் திரளாகப் பங்கேற்றனா்.

இதேபோல திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை சமேத மாதேஸ்வரன் கோயில், குந்தாணிபாளையம் நத்தமேடு ஈஸ்வரன் கோயில், புன்னம் பகுதி புன்னைவன நாயகி உடனுறை புன்னைவன நாதா் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com