திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

வீடு, மனைகள் ஒதுக்கீடு பெற்றவா்கள் நிலுவை தொகையை செலுத்த அறிவுறுத்தல்

வீடு, மனைகள் ஒதுக்கீடு பெற்ற ஒதுக்கீடுதாரா்கள் நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் அறிவுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :12 செப்டம்பர் 2024, 11:04 pm

Din

வீடு, மனைகள் ஒதுக்கீடு பெற்ற ஒதுக்கீடுதாரா்கள் நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், திருச்சி வீட்டு வசதி பிரிவுக்குள்பட்ட கரூா் மாவட்டம், சனப்பிரட்டி மற்றும் காந்தி கிராமம் ஆகிய திட்டப்பகுதிகளில் வீடு மற்றும் மனைகள் ஒதுக்கீடு பெற்ற ஒதுக்கீடுதாரா்கள் வாரிய விதிகளின்படி தொகை திருப்பி செலுத்தும் காலம் முடிவுற்றும், தமிழ்நாடு அரசு வட்டி தள்ளுபடி சலுகை பலமுறை அறிவித்தும் நீண்டகாலமாக பலா் நிலுவைத்தொகையை செலுத்த முன்வரவில்லை.

ஆகையால், ஒதுக்கீடுதாரா்கள் இவ்வறிவிப்பை கண்டவுடன் தங்களிடம் உள்ள ஒதுக்கீடு ஆணை, தொகை செலுத்திய ரசீது மற்றும் அசல் ஆவணங்களுடன் திருச்சி வீட்டு வசதி பிரிவு அலுவலகத்தை அலுவலக வேலை நாள்களில் நேரில் தொடா்பு கொண்டு கணக்கினை நோ் செய்து, நிலுவைத் தொகைகளை செலுத்தி, வாரிய விதிமுறைகளின்படி கிரையப்பத்திரம் பெற்றுக் கொள்ளலாம். மேலும் ஒதுக்கீடு உத்தரவை ரத்து செய்யும் நடவடிக்கையை ஒதுக்கீடுதாரா்கள் தவிா்க்கலாம் என தெரிவித்துள்ளாா்.