

பெண் ஜாதகத்தில் கருக்கலைப்பு தொடர்பான ஜோதிட குறிகாட்டிகள் பற்றி இந்த கட்டுரையில் அறியலாம்.
வக்கிரம் பெற்ற கிரகங்களின் செல்வாக்கு மற்றும் 5 வது வீடு மற்றும் அதன் அதிபதியை உள்ளடக்கிய குறிப்பிட்ட சேர்க்கைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டியதாகிறது. 5 வது வீடு அல்லது அதன் அதிபதி வக்கிரம் பெற்ற கிரகங்கள், செவ்வாய் அல்லது கேதுவால் பாதிக்கப்படுவதால் கருக்கலைப்பு ஏற்படக்கூடிய பல்வேறு நிகழ்வுகளை இது கோடிட்டுக் காட்டுகிறது.
ஊர் மற்றும் உலகத்தாரின் பார்வைக்காகத் தனது கௌரவம் மற்றும் வசதி போன்றவற்றின் காரணமாக அதிகமாகக் கருக்கலைப்பு செய்பவர்கள் 6 ஆம் இடத்தில் வக்கிரம் பெற்ற குரு அமர்ந்திருப்பின் அதுவும் நெருப்பு ராசிகளான மேஷம், சிம்மம் மற்றும் தனுசு ராசிகளை 6 ஆம் இடமாகப் பெற்ற ஆண் ஜாதகர்கள், நிச்சயம் தனது மனைவிமார்களை அதிக கருக்கலைப்பு செய்யத் தூண்டும் சூழலைத் தருபவர்களாக இருப்பர்.
பல்வேறு விதிகள் இருப்பினும், ஒரு சில உதாரண ஜாதகங்கள் கொண்டு பின்வரும் விதிகள் நிரூபணமாகக் கொள்ளலாம்.
1. 5 ஆம் வீட்டு அதிபதி (குழந்தைப் பேறுக்கு காரக கிரகம்) ஒருவரின் ஜாதகத்தில், வக்கிரம் பெற்றிருத்தல்.
2. 5 ஆம் வீட்டில் ஒரு வக்கிரம் கிரகம் இடம் பெற்றிருத்தல்.
3. 5 ஆம் வீட்டு அதிபதி வேறொரு வக்கிரம் பெற்ற கிரகத்துடன் சேர்ந்து எந்த வீட்டிலாவது இருத்தல்.
4. 5 ஆம் வீட்டை, மேலே கூறிய விதிகளோடு ராகுவும் அதன் தாக்கத்தைப் பெற்றிருப்பது.
5. 5 ஆம் வீடு மற்றும் 5 ஆம் வீட்டு அதிபதியைச் செவ்வாய் அல்லது கேது அல்லது இரண்டும் இணைந்து பாதிப்பளிப்பது.
6. 5 ஆம் வீட்டில் நீச்சம் பெற்ற கிரகம் இருந்தால்.
மேற்படி உதாரண ஜாதகம் 1 ல் :-
லக்கினத்திற்கு 5 ஆம் அதிபதி சனி வக்ரம் பெற்று 5 ல் உள்ளார். (விதி 1,2 படி )
நீச்சம் அடைந்த செவ்வாய் 5 ஆம் வீட்டையும், 5 ஆம் அதிபதியையும் தனது 8 ஆம் பார்வையால் பார்ப்பது . (விதி 5 படி )
கருக்கலைப்பு, இயற்கையாகவும் மற்றும் தம்பதியினரின் விருப்பப்படியும் நடந்தேறியது.
மேற்படி உதாரண ஜாதகம் 2 ல் :-
1. 5 ஆம் வீட்டு அதிபதி மற்றும் குழந்தை பிறப்புக்கு காரகர் "குரு" வக்கிரம் (விதி 1படி ).
2. 5 ஆம் வீட்டில் புதன் நீச்சம் (விதி 6 படி )
3.5 ஆம் வீட்டில் ராகு நீச்சமடைந்த புதனுடன் இணைவு ( விதி-4)
4. கேதுவுடன் இணைந்த செவ்வாய் 5 ஆம் வீட்டை பார்ப்பது. ( விதி-5)
மேலும் ராகு, கேது அச்சில் 5 ஆம் வீட்டு அதிபதி குரு இருத்தல்.
முதல் குழந்தையைத் தம்பதியினர் தள்ளிப் போடலாம் என நினைத்துக் கருக்கலைப்பு செய்தனர். பிறகு இன்னொரு முறைத் தானாகவே கருக் கலைந்தது. தம்பதியினர், இன்று வரை குழந்தைக்காகக் காத்திருக்கிறார்கள் செயற்கை கரு வளர்ப்பு நிலையத்தில்.
பயிற்சி பெறாத நபர்களால் அல்லது சுகாதாரமற்ற சூழ்நிலைகளில் செய்யப்படும் பாதுகாப்பற்ற கருக்கலைப்புகள், ரத்தப்போக்கு, தொற்று, உறுப்பு சேதம், கருவுறாமை மற்றும் இறப்பு போன்ற கடுமையான உடல் நல அபாயங்களுக்கு வழிவகுக்கும்.
இது உலகளவில் தாய்வழி இறப்பு மற்றும் இயலாமைக்குக் கணிசமாகப் பங்களிக்கிறது. உடல் ரீதியான பாதிப்புகளுக்குக்கிடையே, அவை ஆழ்ந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது மற்றும் தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் சுகாதார அமைப்புகள் மீது பெரும் நிதிச் சுமைகளைச் சுமத்துகின்றனர்.
இந்த கட்டுரைக்குக் காரணமே, திருமண பொருத்தம் பார்க்கும்போது குழந்தைப் பிறப்பு பற்றி ஜோதிட ரீதியாக அறிந்து சிறந்த மருத்துவ உதவி / அறிவுரை பெறுவது. சிறந்த ஜோதிட அறிவுரையின்பேரில் முதல் குழந்தை பெறுவதைத் தள்ளிப் போடாமல் இருத்தல். மொத்தத்தில் ஜோதிடம் ஒரு சிறந்த வழிகாட்டி என அனைவரும் அறிதல் அவசியமாகிறது.
கருக்கலைப்பு எந்தவிதமான உடல் நலிவு ஏற்படுத்துகிறது என்பதனை அனைவரும் அறியும் வண்ணம், "சர்வதேச பாதுகாப்பான கருக்கலைப்பு தினம்" ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் - 28, உலகளவில் சுகாதாரப் பாதுகாப்புக்கான அணுகுதல் மையமாகக் கொண்டு நடத்தப்படுகிறது.
ஜோதிடம் ஒரு முன் எச்சரிக்கையே தவிர, முடிவு அல்ல என்பதனை உணரவும்... அதே போல் ஜோதிடர் வழிகாட்டியே தவிர, கடவுள் அல்ல... பரிகாரம், என்பது ஜாதகர் மனமாற்றமும், கடவுளிடம் முழு சரணாகதியுமே ஆகும்.
தொடர்புக்கு: WA 98407 17857 & 91502 75369
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.