வேலை செய்வதில் நீங்கள் எப்படிப்பட்டவர்கள்?

வேலையில் நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைப் பற்றி ஜோதிடர் கூறுவது..
weekly predictions
வார பலன்கள்
Updated on
2 min read

வேலைக்குச் செல்பவர்கள் அது சொந்த தொழிலாக இருப்பினும், வேறுவொரு நிறுவனத்தில் வேலை செய்பவராக இருப்பினும் அவர்கள் செய்யும் வேலை எவ்வாறு இருக்கும் என்பதனை அறிவது அவரின் சரியான பிறப்பு குறிப்புகள் இருப்பின் நிச்சயம் சொல்லிவிடலாம்.

ஆம், இந்தக் கட்டுரையைப் படித்து பின்னர் உங்கள் ஆசை மனதைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள், இவை சரியாக உள்ளதா என.. நிச்சயம் 80 - 90 சதவீதம் சரியாக இருக்கும்.

சரியில்லாமல் போவதற்குக் காரணம் 10ஆம் அதிபதி நின்ற நட்சத்திர அதிபதி - ஒன்று பாதகாதிபதியாக அல்லது அஷ்டமாதிபதியாக அல்லது அவயோகியாக இருப்பது மட்டும் தான்.

"நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்

நாட்டைக் கெடுத்ததுடன் தானுங்கெட்டார்; சிலர்

அல்லும் பகலும் தெருக்கல்லா இருந்துவிட்டு

அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொண்டார்

விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்..."

1. சூரியனின் நக்ஷத்திரத்தில் ( கிருத்திகை, உத்திரம், உத்திராடம்),

உங்கள் ஜாதகத்தில் 10 ஆம் அதிபதி நின்றால்.. பணத்தை விட நீங்கள் வேலையில் அதிகாரம், அந்தஸ்து மற்றும் கௌரவத்தை அதிகம் தேடுகிறீர்கள்.

2. சந்திரனின் நக்ஷத்திரத்தில் (ரோகிணி, அஸ்தம், திருவோணம்),

உங்கள் ஜாதகத்தில் 10 ஆம் அதிபதி நின்றால்.. நீங்கள் அலுவலகத்திலும் வீட்டு வசதியை விரும்புகிறீர்கள், வீட்டிலிருந்து வேலை செய்ய விரும்புகிறீர்கள், உங்கள் பணியிடத்தில் நல்ல உணவை விரும்புகிறீர்கள், உங்கள் அலுவலகத்தையும் வீட்டைப் போலவே வசதியாக மாற்றுவீர்கள்.

3. செவ்வாயின் நக்ஷத்திரத்தில் (மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்),

உங்கள் ஜாதகத்தில் 10 ஆம் அதிபதி நின்றால்.. வேலையில் மிகவும் பரபரப்பு , 100% அர்ப்பணிப்பு, தன் இலக்குகளை நோக்கி மிகவும் வேகமாகப் பயணிப்பார்கள்.

4. புதனின் நக்ஷத்திரத்தில் ( ஆயில்யம், கேட்டை, ரேவதி),

உங்கள் ஜாதகத்தில் 10 ஆம் அதிபதி நின்றால்.. வேலையில் நிறைய மாற்றங்களைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது, உங்கள் வேலை பெரும்பாலும் மாற்றப்படுகிறது, அலுவலகத்தில் பல தகவல் தொடர்பு சாதனங்கள் இருக்கவே செய்யும்.

5. குருவின் நக்ஷத்திரத்தில் (புனர்பூசம், விசாகம், பூரட்டாதி),

உங்கள் ஜாதகத்தில் 10 ஆம் அதிபதி நின்றால்.. உங்கள் அலுவலகப் படிநிலையில் நீங்கள் எந்தப் பதவியில் இருந்தாலும், மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவதை நீங்கள் விரும்புவீர்கள், வேறு யாராவது உங்களுக்கு அறிவுரை கூறும்போது வெறுப்பீர்கள்.

6. சுக்கிரனின் நக்ஷத்திரத்தில் ( பரணி, பூரம், பூராடம்),

உங்கள் ஜாதகத்தில் 10 ஆம் அதிபதி நின்றால்.. வேலையில் ராஜதந்திரம் இருக்கும். இரண்டு பேர் / குழுவிற்கு இடையே பேச்சுவார்த்தை நடத்துதல், இசை கேட்பதை விரும்புதல், வேலை செய்யும் இடத்தில் விடியோக்களைப் பார்ப்பது, அலுவலகத்திற்கு மிகவும் நன்றாக உடை அணிவது போன்றவை இருக்கும்.

7. சனியின் நக்ஷத்திரத்தில் ( பூசம், அனுஷம், உத்திரட்டாதி),

உங்கள் ஜாதகத்தில் 10 ஆம் அதிபதி நின்றால்.. நீங்கள் ஒரு நிறுவனத்தின் முதலாளி / தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தாலும் கூட, நீங்களே வேலை செய்ய வேண்டியிருக்கும், இந்த நபர்களுக்கு வேலையில் அதிகாரம் கிடைக்காது, அவர்களுக்குத் துணை அதிகாரிகளுடன் / ஊழியருடன் நல்ல உறவு இருக்கும், மேலதிகாரிகளுடன் / இவர்களுக்கு மேலே உள்ள நபர்களிடம் மோசமான உறவு / கடுமையான நிலை இருக்கும்.

8. ராகுவின் நக்ஷத்திரத்தில் ( திருவாதிரை, சுவாதி, சதயம்),

உங்கள் ஜாதகத்தில் 10 ஆம் அதிபதி நின்றால்.. வேலையில் ஒருவித குறும்புகளை எப்போதும் உருவாக்குபவர்கள்.

9. கேதுவின் நக்ஷத்திரத்தில் (அஸ்வினி, மகம், மூலம் ),

உங்கள் ஜாதகத்தில் 10 ஆம் அதிபதி நின்றால்.. இவர்கள் வேலை செய்ய விரும்புவதில்லை, வேலையிலிருந்து தப்பிக்கிறார்கள், எப்போதும் அலுவலகம் விட்டு கிளம்புவதற்கான நேரத்தைப் பார்ப்பார்கள், அலுவலகத்திலிருந்து அடிக்கடி விடுப்பு எடுப்பார்கள்.

மேலே கூறப்பட்டவைகள் சரியாக உள்ளதெனில் அவர்கள் மேலும் நன்றாக வேலை செய்ய வேண்டும். அப்படி இல்லாமல் வேலையில் சரியாக இல்லாதவர்கள் என இருப்பின் அவர்கள் தங்களைச் சரி செய்யலாம், நெறிப்படுத்தி இனியாவது விழித்துக்கொண்டால் தங்களது வேலையில் நன்றாக முயற்சித்தால் நல்லது. அவர்களால் அவர்களது வீட்டிற்கும் ஏன் நமது நாட்டிற்கும் தான் நல்லது.

"ஜோதிடம் ஒரு முன் எச்சரிக்கையே தவிர , முடிவு அல்ல என்பதனை உணரவும்... அதே போல் ஜோதிடர் வழிகாட்டியே தவிர, கடவுள் அல்ல. பரிகாரம், என்பது ஜாதகர் மனமாற்றமும், கடவுளிடம் முழு சரணாகதியுமே ஆகும்."

தொடர்புக்கு : 98407 17857, 91502 75369

weekly predictions
ஒருவரின் லாபம், ஆதாயம் பற்றி ஜோதிடம் சொல்வதென்ன?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com