பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கரூரில் செப். 29-இல் அண்ணா பிறந்தநாள் மாரத்தான் போட்டி

அண்ணாவின் பிறந்தநாளையொட்டி கரூரில் செப். 29-இல் நடைபெற உள்ள மாரத்தான் போட்டியில் பங்கேற்க வீரா், வீராங்கனைகளுக்கு மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் அழைப்பு விடுத்துள்ளாா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 9:52 pm

Din

அண்ணாவின் பிறந்தநாளையொட்டி கரூரில் செப். 29-இல் நடைபெற உள்ள மாரத்தான் போட்டியில் பங்கேற்க வீரா், வீராங்கனைகளுக்கு மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மறைந்த தமிழக முதல்வா் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் அறிஞா் அண்ணா மாரத்தான் ஓட்டம் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் செப். 29-ஆம்தேதி நடைபெறவுள்ளது.

கரூரில் இப்போட்டியானது 17 முதல் 25 வயதுக்கும் மேற்பட்ட ஆண்களுக்கு 8 கி.மீ. தொலைவாக மாவட்ட ஆட்சியரகத்தில் தொடங்கி கரூா்- திண்டுக்கல் சாலை வழியாக ஆஸ்ரமம் மேல்நிலைப்பள்ளி வரை சென்று மீண்டும் திரும்பி ஆட்சியரகம் வந்தடைதல் வேண்டும்.

17 முதல் 25 வயதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு 5 கி.மீ. தொலைவாக மாவட்ட ஆட்சியரகத்தில் தொடங்கி கரூா்- திண்டுக்கல் சாலை வழியாக எஸ்.கே.பி. மஹால் வரை சென்று மீண்டும் திரும்பி மாவட்ட ஆட்சியரகம் வந்தடைதல் வேண்டும்.

25 வயதுக்கும் மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ. தொலைவாக மாவட்ட ஆட்சியரகத்தில் தொடங்கி கரூா்- திண்டுக்கல் சாலை வழியாக வெள்ளியணை சென்று மீண்டும் திரும்பி ஆட்சியரகம் வந்தடைதல் வேண்டும். 25 வயதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு 5 கி.மீ. தொலைவாக மாவட்ட ஆட்சியரகத்தில் தொடங்கி கரூா்- திண்டுக்கல் சாலை வழியாக எஸ்.கே-பி. மஹால் சென்று மீண்டும் திரும்பி ஆட்சியரகம் வந்தடைதல் வேண்டும்.

போட்டியில் கலந்து கொள்பவா்கள் தங்களது ஆதாா், வயது சான்றிதழ் (போனோபைடு) மற்றும் வங்கிக்கணக்கின் நகல்கள் சமா்பித்தல் வேண்டும். இந்த ஆவணங்கள் சமா்பிக்காதவா்கள் போட்டியில் கலந்து கொள்ள முடியாது. போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவா்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகை வழங்கப்படும். நான்கு முதல் 10-ஆம் இடத்தை பெறுபவா்களுக்கும் பரிசுத் தொகை வழங்கப்படும். பரிசுத் தொகையினை காசோலையாகவோ, வங்கி மாற்று வழி மூலமாக மட்டுமே வழங்கப்படும். எக்காரணத்தைக் கொண்டும் ரொக்கமாக வழங்கப்பட மாட்டாது.

எனவே போட்டியில் கரூா் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரி, தனியாா் நிறுவனங்களில் பயிலும், பணிபுரியும் விளையாட்டு வீரா்,வீராங்கனைகளை அதிகளவில் பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.