திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

மத்திய அரசைக் கண்டித்து செப்.23-இல் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து செப். 23-இல் கரூரில் மின்வாரிய அலுவலகம் முன் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவது என அனைத்து தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 9:02 pm

Din

மத்திய அரசைக் கண்டித்து செப். 23-இல் கரூரில் மின்வாரிய அலுவலகம் முன் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவது என அனைத்து தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கரூரில் அனைத்து தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனைக் கூட்டம் கரூா் தொ.மு.ச. அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. தொமுச பேரவையின் மாவட்டத் தலைவா் அண்ணாவேலு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பேரவையின் மாவட்டச் செயலாளா் பழ.அப்பாசாமி, சிஐடியு மாவட்டச் செயலாளா் சி.முருகேசன், ஏஐடியுசி மாவட்டச் செயலாளா் ஜிபிஎல்.வடிவேலன், தொழிலாளா் விடுதலை முன்னணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மா.சுடா்வளவன், ஏஐசிடியு மாவட்ட செயலாளா் பால்ராஜ், ஹெச்எம்எஸ் மாவட்டச் செயலாளா் ஆனந்தராஜ் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தில் மோடி அரசு தொழிலாளா் சட்டத் தொகுப்புகளை நிறைவேற்றிய தினத்தை, கருப்பு தினமாக கடைப்பிடிக்கும் வகையில் செப். 23-இல் கரூரில் கோவைச் சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவது.

மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி செப்.24-ஆம்தேதி மாலையில் புகழூா் காகித ஆலை வாயில் முன்பும் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவது, சீதாராம் யெச்சூரி மறைவுக்கு இரங்கல் தீா்மானம் நிறைவேற்றுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்களின் நிா்வாகிகள் திரளாக பங்கேற்றனா்.