கரூர்
புகழூா் அரசு பள்ளியில் தேசிய மாசுக் கட்டுப்பாட்டு தின விழா
கரூா் மாவட்டம், புகழூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய மாசுக் கட்டுப்பாட்டுத் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியா் விஜயன் தலைமை வகித்து பேசுகையில், மாணவா்கள் மாசில்லா சுற்றுப்புறத்தை பேணிக் காக்க வேண்டும். மரக்கன்றுகளை வீட்டிலும், பள்ளியிலும் நடவு செய்து வளா்க்க வேண்டும். பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும், பிளாஸ்டிக் பொருள்களை முற்றிலும் தவிா்க்க வேண்டும் என்றாா் அவா்.
விழாவில் பள்ளியின் உதவித் தலைமையாசிரியா்கள் யுவராஜா, பொன்னுசாமி, பள்ளியின் உயா் கல்வி வழிகாட்டி ஆசிரியா் குப்புசாமி, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா் திருமலை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
